போஸ்ட் ஆபிஸால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஆகியவை பெரிய வங்கிகள் அளிக்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது. இதில் தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம், 5 வருட காலத்துடன் கூடிய பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வைப்புகளில் 6.7 % வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் இத்திட்டத்தை ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அப்டேட் செய்துக்கொள்ளலாம். அதோடு இது ஒரு சிறந்த நீண்டகால முதலீட்டு விருப்பமாக இருக்கிறது.
மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம்
போஸ்ட் ஆபிஸ் மூலம் வழங்கப்படும் மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டமானது (எஸ்சிஎஸ்எஸ்) சேமிப்பு டெபாசிட் தொகைகளுக்கு 8% வட்டிவிகிதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் வாயிலாக 60 வயதுக்கு மேற்பட்டோர் தன் ஓய்வுக் காலத்தில் நிலையான மற்றும் சிறந்த வருமானத்தை பெறலாம். மேலும் இத்திட்டம் உங்களது பணத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது.
அதோடு மூத்தகுடிமக்களுக்கான பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் 2017ம் வருடம் நரேந்திர மோடி அரசால் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு அதிகமான அனைவரும் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூபாய்.15 லட்சம் ஆகும். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் முதலீடு செய்யும் மூத்தகுடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. முதலீடு செய்யப்பட்ட தொகையை பொறுத்து ஓய்வூதியத்தொகை ரூ.1,000 முதல் ரூ.9,250 வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.