தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நிக்கோலஸ் சாப்மேன் என்ற 57 வயதான மருத்துவர், இங்கிலாந்தின் சமெர்செட் பகுதியில் மருத்துவமனையில் பணியாற்றியபோது, தனது பெண் சக ஊழியருக்காக கொண்டுவரும் காபி மற்றும் பானங்களில் தனது விந்தணுவை கலக்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் விசாரணையின் முடிவில், அவரை இங்கிலாந்து மருத்துவப் பதிவிலிருந்து நிரந்தரமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண், ஒருநாள் அவர் குடித்த காபியில் “சிறிது உப்பு சுவை” இருந்ததாகக் கூறியுள்ளார். சந்தேகமடைந்த அந்த பெண், அதன் பிறகு வழங்கப்பட்ட அனைத்து காபிகளையும் குடிக்காமல் சிங்கில் கொட்ட ஆரம்பித்தார். ஒவ்வொரு முறையும் சிங்கில் காபி கொட்டும் போது, அதில் “அடர்த்தியான, ஒட்டிக்கொள்ளும், வெவ்வேறு அளவுகளில் இருக்கும் பிசுபிசுப்பான பொருள்” இருந்ததைக் கண்டதைக் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இது என்னவென்று புரியவில்லையென்றும், விந்தணு என சந்தேகிக்கவே இல்லை என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டபோது, சாப்மேன் தனது விந்தணுவை நூற்றுக்கணக்கான மாதிரிகளாக சேமித்ததோடு, அவற்றை திட்டமிட்டு அந்த பெண்ணின் பானங்களில் கலக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2023-ம் ஆண்டு நடந்த வழக்கில், அவர் மீது பெண்ணின் அனுமதி இல்லாமல் பாலியல் செயல் புரிந்தது எனக் குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால், சமூக சேவை தண்டனை விதிக்கப்பட்டதோடு, மருத்துவப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சாப்மேன் தனது செயலை மறைக்க முயன்றார். ஆரம்பத்தில், “எனது உடல்நிலையில் கோளாறு உள்ளது. மலம் கழிக்கும்போது விந்தணு வெளியேறும்” என்றார். பின்னர், “யாரோ வேறு ஒருவர் என் மாதிரியை கேலிக்காக கோப்பையில் கலத்திருக்கலாம்” என்றும் அவர் வாதிட்டார். ஆனால், அவரது விளக்கங்கள் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட, அவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து தண்டனை வழங்கப்பட்டது.
இந்த சம்பவம் மருத்துவத் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ ஒழுக்க நெறிகளை மீறியதற்காக, நிக்கோலஸ் சாப்மனை மருத்துவப் பணியில் இருந்து நீக்கப்பட்டது. இது, மருத்துவப் பணியாளர்கள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தினால், அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு தளங்களில் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
