சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம்.

தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம் வெளிப்படும். எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். எந்த காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு முடிவெடுங்கள்.

கணவன் மனைவிக்கிடையே சுமுகமான சூழல் நிலவும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பொறுமையை கடைபிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீலம் நிறம் உங்கள் கஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.