கும்பம் ராசி அன்பர்களே..!
தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நோக்கங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.
இன்று உங்களுடைய நலம் விரும்புபவர்களை சந்திப்பீர்கள். இனிய எண்ணங்களால் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் முன்னேற்றத்திற்காக அதிக பொறுப்புடன் நடந்துக்கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். தொழிலில் இருந்துவந்த பிரச்சினைகள் தீரும். இதனால் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். நண்பர்களின் உதவிகள் தக்க நேரத்தில் வந்துச்சேரும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு இன்று இனிய நாளாக இருக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ற வருமானம் வந்துச்சேரும். குடும்பத் தேவைக்காக சிலர் கடன் வாங்கக்கூடும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். புதிய தொழிலில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே நீங்கள் காலையில் எழுந்ததும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.