மேஷம் ராசி அன்பர்களே..!
வியாபாரத்தில் புதிய நுட்பங்களை பயன்படுத்துவீர்கள்.

கூடுதல் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்துக் காணப்படும். இன்று அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் சரியாகும். கணவன் மனைவி ஒருவரையொருவர் அனுசரித்து நடக்க வேண்டும். பெண்களுக்கு வேலைசுமை அதிகமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு இன்று வெளிப்படும். வசீகரமான தோற்றம் இருக்கும். பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்திச் செய்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் இருக்காமல் சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில்மீது அக்கறை ஏற்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து வாருங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.