சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாளாக இருக்கும்.
புதிய பாதை புலப்படும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய நபர்களால் முன்னேற்றம் இருக்கும். விழிப்புணர்வுடன் எதையும் செய்வீர்கள். பிள்ளைகள் உங்களின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்கக்கூடிய யோகம் இருக்கும். சிலருக்கு வீடு கட்டக்கூடிய முயற்சி போன்ற அனைத்து முயற்சியும் நல்ல விதத்தில் இன்று நடைபெறும். நேர்மையான எண்ணங்கள் பிரதிபலிக்கும். சாமர்த்தியமான பேச்சினால் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
வசீகரமான தோற்றம் வெளிப்படும். இன்று முன்னேற்றம் தரும் நாளாக இருக்கும். எந்தவொரு முடிவையும் தெளிவாக எடுப்பீர்கள். மற்றவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகளையும் செய்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை இல்லாமல் சுமூகமாக செல்லும். காதலில் உள்ளவர்களுக்கு குறைகள் அனைத்தும் சரியாகிவிடும். காதலுக்காக எந்த முயற்சி மேற்கொண்டாலும் வெற்றி உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக வைத்துவிட்டு பணியை மேற்கொள்ளுங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறம்.