கடகம் ராசி அன்பர்களே…! பெருந்தன்மையுடன் அனைவருடன் பழகுவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் இருக்கிற குறுக்கீடு விலகிச்செல்லும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதுரியமாக நடந்து கொள்வது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகள் ஓரளவு சாதகமான பலனைக் கொடுக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உடைமைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும்.

ஆவணங்களை சரி பார்த்துக் கொண்டு செல்வது ரொம்ப நல்லது. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் இன் அன்பு பரிபூரணமாக கிடைக்கும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். வெற்றி மேல் வெற்றி இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்று அமையும். சுபகாரிய பேச்சு இல்லத்தில் நடத்துங்கள் நல்லபடியாக நடக்கும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னம் தானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிஷ்ட எண் 4 மற்றும் 7.
அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் நீல நிறம்.