விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் உள்ளதால் எதிலும் எச்சரிக்கை என்பது கண்டிப்பாக வேண்டும்.

தனவரவு வருவதில் தாமதம் இருக்கும்.மற்றவர்களுக்கு உதவி செய்யும் பொழுது எச்சரிக்கை என்பது கண்டிப்பாக வேண்டும். அடுத்தவர்களுக்காக என்று நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். எதிரிகள் ஓரளவு தவிடுபொடி ஆனாலும் கண்டிப்பாக கவனம் வேண்டும். பயணம் அலைச்சலை கொடுப்பதாக தான் இருக்கும். பயண பிரச்சினைகள் ஓரளவு தலைதூக்கும். சில யுக்திகளை கையாண்டு தான் வாழ்க்கை இன்று நீங்கள் நடத்தியாக வேண்டும். ஆகையால் கூடுமானவரை கவனம் என்பதை விட்டுவிடாதீர்கள்.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்து ஏதும் போட வேண்டாம். அதேபோல வாக்குறுதிகளும் கொடுக்க வேண்டாம். பணம் நான் பெற்று தருகிறேன் என்று எந்தவித செயலையும் செய்ய வேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக செல்லுங்கள்.தேவையான விஷயங்கள் மட்டும் பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தயவுசெய்து தலையிட வேண்டாம். அடுத்தவர்களுடைய பொறுப்பை கண்டிப்பாக ஏற்க வேண்டாம். எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும் கவனமாக இருக்க வேண்டும்.

மாணவக் கண்மணிகள் மிகவும் கவனமாக பாடங்களை படிக்க வேண்டும். வீண் விவகாரங்களில் தயவுசெய்து விலகி இருக்க வேண்டும். பஞ்சாயத்துகளில் ஏதும் கலந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கும் அறிவுரை ஏதும் கொடுக்க வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கையாள வேண்டியிருக்கும். கோபமான பேச்சை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.

அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9.

அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.