விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று சிலருக்கு வேலையின் காரணமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

எதிர்பார்த்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு மற்றவர்கள் பொறாமைப் படக்கூடும். அனைவரும் உங்களை பாராட்டக்கூடும். குடும்பத்தில் சிக்கல்கள் வந்து விலகிச் செல்லும் அதனால் செலவுகள் கொஞ்சம் ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மனத்தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டுவீர்கள். வாக்குவாதங்களில் மட்டும் ஈடுபட வேண்டாம். அக்கம்பக்கத்தினரிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள்.

யாரைப் பற்றியும் குறை ஏதும் இன்று சொல்ல வேண்டாம். அதேபோல் வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். சில பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது ரொம்ப எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.. மென்மையான சூழல் நிலவினாலும், சில நேரங்களில் சில விஷயங்களில் கொஞ்சம் கடுமையான சூழலும் நிலவும், அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் சிரமங்கள் ஏதும் இல்லை. கோபமான பேச்சை மட்டும் விட்டுவிடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள், காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்தும் ஓடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.