விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் யோகமான நாள்.

கடன்சுமை குறையும். பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். அனைத்தும் இன்று நன்மையாக நடக்கும். இன்று தடைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். முயற்சி வெற்றியைக் கொடுக்கும். நியாயத்துடன் நடந்துக் கொள்வீர்கள். நேர்மையான எண்ணத்தால் அனைவரையும் கவர்வீர்கள். வீண்பகை உண்டாக்கக்கூடும். இன்று விவசாயிகளுக்கு முன்னேற்றம்தரும் வகையில் சூழல் அமையும். புதிய நிலம் மற்றும் வீடு வாங்கக்கூடிய யோகம் உண்டாகும்.

பங்காளிகளை அனுசரித்து செல்ல வேண்டும். புதிய வாய்ப்புகள் தாமதப்பட்டாலும் நல்ல வாய்ப்புகளாக இருக்கும். அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். இன்று உங்களுக்கு இறைவனின் அருள் உண்டாகும். நிதானமாக காரியங்களை மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பழைய பிரச்சனைகளுக்கு இன்று தீர்வு கிடைக்கும். உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரின் உடல் நலத்திலும் கவனம் கொள்ள வேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுகள் தேவை. தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். விட்டுக்கொடுத்து சென்றால் முன்னேற்றம் அடையலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் சிவப்பு நிறம்.