துலாம் ராசி அன்பர்களே..!
சேமிப்பு செலவிற்கு பயன்படும்.

அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வெளியிடங்களில் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். இன்று நல்ல ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் நலன்கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இடையூறு செய்தவர்களை அடையாளம் கண்டுக் கொள்வீர்கள். புதிய முயற்சிகள் ஓரளவு நன்மையைக் கொடுக்கும். தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். இன்று மற்றவர்களுக்கு உதவிகள் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். மற்றவர்களின் ஆதரவும் கிடைக்கும்.

குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு உண்டாகும். தேவையான பண உதவி கிடைக்கும். ஆரோக்யம் சீராக இருக்கும். வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே கடைப்பிடியுங்கள். கோபத்தை தவிர்க்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இள மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.