கன்னி ராசி அன்பர்களே..!
இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள்.

சீரான மனநிலையில் இருப்பீர்கள். உடல் ஓய்வாக இருக்கும். முன்னேற்றம் உண்டாகும். இன்று வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக உதவிகளைப் புறிவீர்கள். தனவரவு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகிச்செல்லும். ஏற்றுமதித் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். நல்லச்செய்தி இல்லம் தேடிவரும். சரியான நேரத்திற்கு சரியான தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல் வாங்கலிலும் எதிர்பாராத லாபம் உண்டாகும். முக்கியமானவர்களின் சந்திப்பினால் பல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். வரன்கள் வீடு வந்துச்சேரும். பணவரவு அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடித்து விடுவீர்கள். வசீகரமான தோற்றம் வெளிப்படும். கல்யாண கனவுகள் நனவாகும். காதலும் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இள மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றையநாள் சிறப்பான நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.