
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யாஹ்யா சின்வார். அந்த மிகப்பெரிய தாக்குதலுக்கு அடுத்து யாஹ்யா சின்வார் தலைமறைவாகியுள்ளார். இஸ்ரேல் அரசு இவரை தொடர்ந்து தேடி வந்தது. இந்நிலையில் காசா எல்லையில் பூமிக்கு அடியில் பாதாள இடைபாடுகளில் யாஹ்யா சின்வார் (61) குறைந்த அளவு பாதுகாப்பில் இருந்தார். இந்த நிலையில் யாஹ்யா சின்வார் கடைசி நிமிடங்களை இஸ்ரேல் ராணுவம் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டது.
இந்த வீடியோ இஸ்ரேலின் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் கேமரா மூலம் பதிவு செய்துள்ளது. யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறியதாவது, ஓராண்டு கால தேடலுக்குப் பிறகு ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார். இதுவே போரின் முடிவுக்கான தொடக்க புள்ளியாகும். சின்வார் கொலை காசா போரில் முக்கியமானதாகும். இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
Raw footage of Yahya Sinwar’s last moments: pic.twitter.com/GJGDlu7bie
— LTC Nadav Shoshani (@LTC_Shoshani) October 17, 2024