சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் போட்டி தொடங்கியுள்ளது. இதனை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் சீன பாரம்பரிய படி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அணிவகுப்பில் வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டின் கொடியை ஏந்தி வலம் வந்தனர்..

அக்டோபர் 8ஆம் தேதி வரை 16 நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 12,500 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து 655 வீரர், வீராங்கனைகள் ஆடவர் (331 பேர், மகளிர் 324 பேர்) கலந்து கொண்டுள்ளனர். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய விளையாட்டுகள் ஓராண்டு தாமதமாக நடைபெறுகிறது. சீனாவில் 6 நகரங்களில் 61 பிரிவுகளில் நடைபெறும் 40 விளையாட்டுப் போட்டிகளில் 45 நாடுகள் பங்கேற்கின்றன. அதிகாரப்பூர்வமாக போட்டிகள் இன்று தொடங்கினாலும் சில போட்டிகள் 19ஆம் தேதி தொடங்கி விட்டன.

https://twitter.com/ajoshijdpece/status/1705557781904859220