ஐபிஎல் 2023ல் விராட் கோலியுடன் மோதிய நவீன்-உல்-ஹக்கின் பிறந்தநாளுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பா.ஜ.,வின்  எம்.பி.யுமான கெளதம் கம்பீர் எப்போதும் தனது கருத்துக்களால் செய்திகளில் இடம்பிடிக்கிறார். கிரிக்கெட் உலகில் நடக்கும் சம்பவங்கள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் கம்பீர், மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளார். ஐபிஎல் 2023ல் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் விராட் கோலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான போட்டியில் பல அதிரடியான நிகழ்வுகள் நடந்தன. கோலி களத்தில் ஆக்ரோஷமாக பீல்டிங் செய்து கொண்டிருந்தார். இதனால் நவீனும், கோலியும் ஒருவரையொருவர் முறைத்து கொண்டிருந்தனர். பின் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நவீனின் பேட்டிங்கின் போது விராட் கோலியும், முகமது சிராஜும் நவீனுடன் பேசிக் கொண்டிருந்த போது அமித் மிஸ்ரா தலையிட முயன்றார். ஆனால் கோலி நிற்காமல் ஏதோ சொல்லிக்கொண்டே இருந்தார். போட்டி முடிந்ததும் கோலியும், நவீனும் முன்னோக்கி வந்தபோது இருவரும் ஆரம்பத்தில் கைகுலுக்கினர். ஆனால் இங்கும் இருவருக்கும் சலசலப்பு ஏற்பட்டது. பின் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் இடையே நடந்த சண்டையில் லக்னோ பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் தலையிட்டார். சக வீரர்கள் சூழ்ந்து நிற்க அது விராட் கோலிக்கும், கம்பீருக்கும் இடையே மோதலாக மாறியது. கே எல் ராகுல் உட்பட சக வீரர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி வைத்தனர்.

இந்நிலையில்  நவீன்-உல்-ஹக்குடன் விராட் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் வீரர், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் கவுதம் கம்பீர். கம்பீர் தனது இன்ஸ்டாவில், நவீன்-உல்-ஹக்குடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, “பிறந்தநாள் வாழ்த்துக்கள்… உங்களைப் போல் வெகு சிலரே இருக்கிறார்கள், ஒருபோதும் மாறாதே!” என்று கூறினார். இந்த வாழ்த்து பதிவு வைரலாகி வருகிறது. இந்த பதிவில் இருந்து கோலி ரசிகர்கள் கம்பீரை குறிவைத்து வருகின்றனர்.

நவின்-உல்-ஹக் மற்றும் சர்ச்சை :

நவின்-உல்-ஹக் தனது உணர்ச்சிமிக்க இயல்புக்காகவும் அறியப்படுகிறார். லங்கா பிரீமியர் லீக் போட்டியின் போது கூட பாகிஸ்தானின் முகமது அமீர் மற்றும் ஷாஹித் அப்ரிடியுடன் அவர் சண்டையிட்டார். தன் இயல்பைப் பற்றி ஒருமுறை ஒரு நிகழ்வில் நவீன் கூறியிருந்தார், “என்னிடம் யாராவது வந்து ஏதாவது சொன்னால் நான் பின்வாங்க மாட்டேன். நான் சிறுவயதில் இருந்தே இப்படித்தான். அதுதான் என் இயல்பு.  நாளையிலிருந்து மாற்றிக் கொள்கிறேன் என்று சொன்னால் நான் உண்மையாக பேசமாட்டேன்.  யாராவது என்னிடம் ஏதாவது சொன்னால் நான் பின்வாங்குவேன் என்று சொன்னால், நான் அதை செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது.  பின்வாங்கச் சொன்னால், அது ஒருபோதும் நடக்காது. அது என் உடம்பில் இருக்கிறது, அது என் டிஎன்ஏவில் உள்ளது” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.