ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பேட்மிண்டனில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரணாய் வெண்கல பதக்கம் வென்றார். அரையிறுதியில் சீன வீரர் 21 – 16 மற்றும் 21 – 9 என்ற செட் கணக்கில் வென்றதால் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

முன்னதாக வில்வித்தை போட்டியில் அங்கிதா பகத், பஜன் கவுர், சிம்ரன்ஜீத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. அங்கிதா, பஜன் கவுர் மற்றும் சிம்ரன்ஜீத் கவுர் மூவரும் 6-2 என்ற கோல் கணக்கில் வியட்நாமை வீழ்த்தினர். ஆசிய விளையாட்டு போட்டியில் 21 தங்கம், 32 வெள்ளி, 35 வெண்கல பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.