இந்தியாவில் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பல சேமிப்பு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் சில குறிப்பிட்ட திட்டங்கள் மூன்று மடங்கு அதிக வருமானம் தருகின்றன. அதாவது SIIP திட்டம் பிரீமியம் யூனிட் இணைக்கப்பட்ட திட்டமாகும். இது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான வருமானம் மற்றும் நன்மைகளுக்கான உத்திரவாதத்தை வழங்குகின்றது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 21 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தினால் அதன் முடிவில் தொகையின் மூன்று மடங்கு திரும்ப கிடைக்கும்.

அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தில் மாதாந்திர, அரையாண்டு, காலாண்டு மற்றும் வருடாந்திர பிரீமியம் செலுத்துவதற்கான விருப்பமும் உள்ளது. இது வருடத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் என மாதம் நான்காயிரம் ரூபாய் முதலீடு செய்தால் இதன் கீழ் 4,80,000 ரூபாய் காப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இதில் தினமும் 134 ரூபாய் சேமித்தால் மாதம் 4000 ரூபாய் செலுத்தி 21 ஆண்டுகளில் முதலீட்டு தொகை 10,08,000 ரூபாய் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும்.