இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு பணம் பிடித்த எஸ்பிஐ வங்கிக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரெடிட் கார்டை பயன்படுத்தாத சூழலில் படம் பிடிக்கப்பட்டதாக வங்கியில் முத்துக்குமார் என்பவர் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கில் நஷ்ட ஈடாக 20 ஆயிரம் ரூபாய் மற்றும் பிடித்தம் செய்த ரூ.17,742 திரும்ப தர வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது.