இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி சிறப்பு சுற்றுலா சலுகையை அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருந்தால் அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். மொத்தம் 13 பகல் மற்றும் 12 இரவுகள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜில் பயணிகள் உடைய தங்குமிடம், உணவு மற்றும் சுற்றி பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுற்றிப் பார்க்கலாம் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் வதோதரா, துவாரகா, சோம்நாத் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களுக்கும் செல்லலாம். இந்த சுற்றுலா பேக்கேஜ் ஹைதராபாத்தில் இருந்து டிசம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்கும். டிசம்பர் 25ஆம் தேதி முடிவடையும். இது ஐஆர்சிடிசி யின் மிகவும் சிக்கனமான டூர் பேக்கேஜ். இந்த டூர் பேக்கேஜ் எக்கனாமி பிரிவில் ஒரு நபருக்கு 22910 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   ஸ்டாண்டர்ட் பிரிவில் 37,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.