இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இதன் மூலமாக ஏற்படும் புகையால் மாசு ஏற்படுவதால் மத்திய அரசு மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கிறது. இது தொடர்பாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் சொன்ன திட்டம் அமலுக்கு வந்தால் மின்சார வாகனங்களின் விலை குறையும் என கூறப்படுகிறது. இதனால் மக்களுக்கு மின்சார வாகனங்களை வாங்க எந்த சிரமமும் இருக்காது.

இதை சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது மட்டுமல்லாமல் ஏழை மக்களும் வாகனம் வாங்க வழி செய்யும். இந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சார்ஜிங் பாயின்ட்களை அதிகரிக்கும் பணியை அரசு மேற்கொள்ள உள்ளது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்கள் விலை குறைந்தால் பொதுமக்களின் எரிபொருள் செலவு வெகுவாக குறையும் என்பதால் இந்தத் திட்டத்திற்காக மக்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.