ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து நம் நாட்டின் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை இந்தியா முறியடித்தது. இது தொடர்பாக மத்திய பிரதேச முதல் மந்திரி மோகன் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது, “காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும்போது பயங்கரவாதிகள் நம் இந்தியர்களை கொன்றனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக இந்திய ராணுவம் பலமுறை அரசாங்கத்திடம் உத்தரவு கேட்டது. அதன் பின் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டது. தற்போது புது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால் இந்தியாவை தாக்குவதற்கு முன் பயங்கரவாதிகள் பல முறை யோசிப்பார்கள். இனி எந்த நாடாவது நம்மை தாக்க முயன்றால் இந்தியா அவர்களுக்கு தண்டனை கொடுக்காமல் விடாது. காங்கிரஸ் ஆட்சியின் போது எதிரிகள் நமது ராணுவ வீரர்களின் தலையை துண்டித்ததால் இந்தியா கொடுத்த பதிலடி மூலம் இருண்ட சகாப்தம் முடிவுக்கு வந்தது” என்று அவர் கூறினார்.