டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அங்கு ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கிலிருந்து கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கிய நிலையில் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். இதைத்தொடர்ந்து நேற்று அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார். அடுத்த வருடம் டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையை கலைத்துவிட்டு தற்போதே தேர்தலுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

அதே சமயத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யும் போது புதிய முதல்வராக அவருடைய மனைவி தேர்வு செய்யப்படுவார் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் தற்போது டெல்லியின் புதிய முதல்வராக அமைச்சர் அதிஷி நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. இவர் 14 துறைகளை நிர்வகித்து வரும் நிலையில் சமீபத்தில் உண்ணாவிரத போராட்டம் இருந்ததன் மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றார். இந்த முதல்வர்  ரேசில் இன்னும் இரு அமைச்சர்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் முதல்வர் இல்லாத சமயத்தில் அரசை அதிஷி தான் நிர்வகித்தார். மேலும் இதன் காரணமாக அதிஷி முதல்வராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.