நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கிலேயே அவருக்கு சமன் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த வழக்கிலே ஏற்கனவே  டெல்லியின் துணை முதல்வராக இருந்த மணி சிசோடியா சிறையில் இருக்கிறார். இதை தவிர ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்கும் கைது செய்யப்பட்டு,  அவரும் சிறையில் இருக்கிறார்.

இன்று உச்சநீதிமன்றம் மணி சிசோடியாவின் பெயில் மனு மீது தீர்ப்பு அளித்திருந்தது. அதிலே அவர் பெயில் கோரிக்கையை நிராகரித்து. இந்த வழக்கிலேயே விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி தெரிவித்திருந்தது. அதாவது அமலாக்கத்துறை இந்த வழக்கின் விசாரணையை நீட்டித்துக் கொண்டே செல்லக்கூடாது. விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் எனவும், இப்போதைக்கு மணி சிசோடியாவுக்கு பெயில் கிடையாது எனவும் தெரிவித்தது.

இந்த வழக்கிலேயே சிபிஐ அரவிந்தகெஜ்ரிவாலிடம் ஏப்ரல் மாதத்திலே விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் ஒருவர் பின் ஒருவராக இந்த வழக்கிலேயே அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்கள் மதுபான நிர்வாகிகளுடன் சேர்ந்து ஊழலில் ஈடுபட்டதாகவும்,  மதுபானத்தை விநியோகம் செய்பவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 338 கோடி ரூபாயை கையூட்டு பெற்று,  அந்த பணத்தை கோவா சட்டசபை தேர்தல்,  பஞ்சாப் பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஆகிய பணிகளிலே பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தான் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை தற்போது சமன் அனுப்பி இருக்கிறது. நவம்பர் 2ஆம் தேதி ஆஜராக வேண்டும் என அந்த  சம்மனில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.  அரவிந்த் கெஜ்ரிவாலின் உத்தரவுப்படிதான் டெல்லி மதுபான விநியோக கொள்கை மாற்றப்பட்டு,  புதிய கொள்கை கொண்டுவரப்பட்டது. அந்த கொள்கையின் காரணமாக மதுபான விநியோகஸ்தகர்களுக்கு கூடுதல் லாபம் கிடைத்தது. டெல்லி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்பதே இந்த வழக்கின் சாரமாக இருக்கிறது.

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்து விசாரணை செய்து வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியின்  தலைவரும், டெல்லியின் முதலமைச்சருமான  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது சமன் அனுப்பப்பட்டு இருக்கிறது.   நவம்பர் 2ஆம் தேதி அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.