
பாமகவில் இருந்து விலகி அனைத்து மக்கள் அரசியல் கட்சி ( அ.ம.அ.க)_யை ஆரம்பித்து நடத்திவரும் ராஜேஸ்வரி பிரியா, நடிகர் விஜய் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று சொல்லி மனு கொடுத்திருக்கேன். காரணம் என்னன்னா கேட்டீங்கன்னா.. ஜூன் 22 ஆம் தேதி லியோனு ஒரு படத்தோட பாடல் ஒன்னு சோனி சவுத் மியூசிக் என்ற யூடியூப் தளத்துல வெளியிடப்பட்டது. அதுல என்னன்னா…. டிஸ்கிளைமர் கூட இல்லாம, புகை பிடித்தால் புற்றுநோய் வரும்னு ஒரு வாசகம் போடாம அந்த பாடல் வெளியாயிருந்துச்சி.
அந்தப் பாடல்ல வர வரி எல்லாமே புகை மற்றும் மதுவை குறித்து இருந்துச்சு. புகையிலை பவரு.. கிக்கு அப்படின்னு இருந்துச்சு. பத்த வச்சி புகை எடுத்தா… அப்படினு சொல்லுற மாதிரி.. இளைஞர்களையும் – சிறுவர்களையும் பாதிக்கும் வண்ணம் இருந்துச்சு. பாட்டில்ல வேண்டாம், அண்டாவில் கொண்டு வா அப்படியெல்லாம் வரிகள் இருந்தது. அந்த வரிகளை நிக்கணும் அப்படினு சொல்லி மனு கொடுத்துள்ளேன்.
நான் இது தொடர்பாக, ஏன் இப்படி கொஞ்சம் கூட சிந்திக்காமல் ? உங்கள நம்பி சின்ன ரசிகர்கள், சின்ன பிள்ளைங்க எல்லாம் ரசிகர்களாக இருக்காங்களேன்னு ஒரு பேட்டி கொடுத்து இருந்தேங்க. அந்த பேட்டியோட விளைவு என்ன ஆச்சுன்னா ? அது கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் ஒரே தளத்துல பார்வையாளர்கள் பார்த்து இருந்தாங்க அந்த பேட்டியை…
விஜய் அவர்கள் பணம் படைத்த ஒரு நடிகர் தான் அப்படிங்கிறத நிரூபிப்பதற்காக…. பல ஃபேக் ஐடி, ட்விட்டர்ல பல போலி கணக்குகளை தொடங்க சொல்லி பணம் கொடுத்து, நிறைய ஆபாச வசனங்கள், ஆபாசமான வீடியோக்கள், மிக மிக கொச்சையான வார்த்தைகள் இவை எல்லாவற்றையுமே ஒரு சாதாரண பெண்களால கூட பொறுத்துக்கவே முடியாதுங்க என ஆவேசமாக பேசினார்.