பெங்களூரில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) தலைமறைவு கண்காணிப்பு குழு (ஏடிடி) மூலம் முகமது இம்ரான் கான் என்ற 39 வயது நபர் கைது செய்யப்பட்டதை இந்த செய்தி அறிக்கை விவரிக்கிறது. 

கண்காணிப்பு மற்றும் பிடிப்பு: தேசிய புலனாய்வு அமைப்பு NIA ன் ஏடிடி அமைப்பு பல மாதங்களாக இம்ரான் கானின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தது, இறுதியில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அவரை கைது செய்தது.

குற்றவியல் வரலாறு: இம்ரான் கான்  பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், பல குற்றவியல் வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் NIA வெளிப்படுத்தியது. 

மனித கடத்தல் வழக்கு:  இம்ரான் கான் மீது நிலுவையில் இருக்கும் ஏராளமான வழக்குகளில்  NIA ஆல் தேடப்பட்ட குறிப்பிட்ட முக்கியமான வழக்கு மனித கடத்தல் நடவடிக்கை தொடர்பானது தான். மங்களூருவில் முறையான ஆவணங்கள் இன்றி இலங்கையை  சேர்ந்த குழுவொன்று தங்கியிருப்பதாக மங்களூரு தெற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு நம்பத்தகுந்த தகவல் ஒன்று உளவுத்துறை தரப்பிலிருந்து கிடைத்தது.

இலங்கையை சேர்ந்த குழு  கைது:  உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில், மங்களூரு தெற்கு போலீசார் ஜூன் 6, 2021 அன்று அதிதீவிர நடவடிக்கையை மேற்கொள்ள, சரியான ஆவணங்கள் இல்லாமல் மங்களூரில் தங்கியிருந்த 38 இலங்கையை சேர்ந்த நபர்கள் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வழக்கு பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் தமிழகம் வழியாக இவர்கள் பெங்களூர் பகுதிக்குள் நுழைந்தது தெரிய வந்தது.

மனித கடத்தலில் ஈடுபாடு: இம்ரான் கான், மற்ற சக குற்றவாளிகளுடன் சேர்ந்து, இந்த இலங்கை பிரஜைகளை பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளை மையமாக கொண்டு  பல்வேறு இடங்களுக்கு ஆட்களை கடத்தியதும் , சர்வதேச மனித கடத்தல் சம்பந்தப்பட்ட ஒரு பரந்த சதித்திட்டத்தில் இம்ரான் கான் முக்கிய பங்கு வகித்ததும்  விசாரணையில் தெரியவந்துள்ளது, இந்த நபர்களை இலங்கையில் இருந்து இந்தியாவிற்கும் பின்னர் பிற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு முக்கிய புள்ளியாக செயல்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது இம்ரான்கான் சிறையில் அடைக்கப்ப்ப்ட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.