லியோ படத்திற்கான அடுத்த அப்டேட் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கணிப்புகளை தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்த நிலையில், பட குழு அவ்வப்போது சில அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ஜூலை 29ஆம் தேதி சஞ்சய் டூட்  அவர்களின் பிறந்தநாளன்று ஆண்டனி தாஸ் என்ற Glimpse  வீடியோவை வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து, தற்போது வரை லியோ பட குழு தரப்பிலிருந்து எந்த அப்டேட்டும் வராத காரணத்தினால்,

ரசிகர்கள் அடுத்த அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை கணிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நடிகர் ஆக்சன் கிங் என அழைக்கப்படும் அர்ஜுன் அவர்களின் பிறந்தநாள் ஆகஸ்ட் 15 ல் வர இருப்பதால் அன்று அவருக்கான சிறப்பு அப்டேட் ஏதேனும் படக்குழு சார்பில் வெளியிடப்படலாம் என ரசிகர்கள் யூகிக்கின்றனர். இந்நிலையில் சுதந்திர தினத்தன்று ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் லியோ கதாபாத்திரம் குறித்த புகைப்படம் அல்லது Glimpse  வீடியோ என ஏதேனும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.