பீஸ்ட் திரைப்பட தோல்வி பற்றி  நடிகர் விஜய் தெரிவித்த பதில் குறித்து இயக்குனர் நெல்சன் பேசியது தற்போது வைரலாகி வருகிறது.  

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக சரியான வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இதர சினிமா ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றத்தை அடைய, ஏராளமான எதிர்மறையான கருத்துக்களை இயக்குனர் நெல்சன் மீது எழத் தொடங்கியது. இந்நிலையில்  ஜெயிலர்  திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறவே, தற்போது இயக்குனர் நெல்சனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் தோல்வி குறித்து அவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில்  வைரலாகி வருகிறது. அதில், பீஸ்ட்  திரைப்படத்திற்கு சரியான விமர்சனங்கள் வரவில்லை என்பதால்  என் மீது கோபமாக இருக்கிறீர்களா ? என நடிகர் விஜய் அவர்களிடம்  நான் கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர், யோவ் அப்போ உனக்கும், எனக்கும் உள்ள பழக்க வழக்கம் எல்லாம் ஒரு படம் மட்டும்தானா? படத்தோடு எல்லாம் முடிந்து விட்டதா ? நீ இப்படி என்னிடம் கேட்டது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அது வேற, இது வேற என்று கூறியதாக தெரிவித்தார்.

மேலும் ஜெயிலர்  படம் நேர்மறையான விமர்சனங்களை பெறுவதை பார்த்துவிட்டு Congratulation  சூப்பர் ஹேப்பி ஃபார் யூ என குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இதுதான் எங்கள் தளபதியின் குணம் என பதிவிட்டு இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vicky (@vicks_y1)