விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவன் தான் இலங்கையை சேர்ந்த ஜனனி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இடையில் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கிய நிலையில் மொபைல் விளம்பரத்தில் நடித்து தனது நடிப்பிற்கு ஆரம்ப புள்ளி வைத்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கி வரும் லியோ திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பள்ளி உடையில் இருக்கும் அழகான புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

janany இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@janany_kj)