தந்தை குட்கா வாங்கி வரச் சொன்னபோது, கடைக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள மஹுவா பகுதியில் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் நடந்துள்ளது. 5 வயது சிறுமி ஒருவரை, அவரது தந்தை அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு குட்கா வாங்கி வரும்படி அனுப்பியுள்ளார்.
அந்தச் சிறுமி கடைக்குச் சென்றபோது, அங்கிருந்த 17 வயது சிறுவன் ஒருவன் அந்தப் பிஞ்சு குழந்தையிடம் நயவஞ்சகமாகப் பேசியுள்ளான்.
“உன் பின்னால் நாய் நிற்கிறது, அது உன்னைக் கடிக்கப் போகிறது” என்று கூறி அந்தச் சிறுமியைப் பயமுறுத்தியுள்ளான். நாய்க்குப் பயந்து நடுங்கிய சிறுமியை, பாதுகாப்பு தருவது போல நடித்து கடைக்குள் அழைத்துச் சென்ற அந்தச் சிறுவன், அங்கு வைத்து அந்தப் பச்சிளம் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
பின்னர் எதுவும் நடக்காதது போல சிறுமியிடம் குட்காவைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியுள்ளான். வீட்டிற்குச் சென்ற சிறுமி நடந்தவற்றைப் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்த 17 வயது சிறுவனைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
