தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 68-வது படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் நிலையில் படத்திற்கு The greatest of all time (GOAT) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் நிலையில் படத்தில் நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் அமீர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் நிலையில் தற்போது படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது முதல் பாடலுக்கு தயாரா என பட குழு போஸ்டர் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதோடு நாளை சம்பவம் உறுதியென இயக்குனர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளதால் நாளை கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது வலைதளத்தில் வைரலாகும் நிலையில் நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.