
தமிழக வாழ்வுரிமை கட்சி நிகழ்வில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் வேல் முருகன், பிக் பாஸ் போய் பாத்துட்டு கிடக்கிறான். பிக் பாஸ் பார்த்தீங்களா பிக்பாஸ் ? ஒரு பையனும், ஒரு பொண்ணு அரைகுறையா கட்டி பிடிச்சு முத்தம் கொடுத்துட்டு கிடக்குறாங்க. பாத்ரூம்ல போனா முத்தம், படுக்கை அறையில் போனால் முத்தம், கண்ணாடிக்கு கண்ணாடி வைத்து முத்தம், அட எழவெடுத்த நாய்களா ? இதுவாடா என் தமிழ் சமூகத்துக்கு நீங்கள் தருகிற செய்தி.
நான் இந்த கூட்டத்திலிருந்து எச்சரிக்கிறேன்…. விஜய் டிவி தொலைக்காட்சியை எச்சரிக்கிறேன், கமலஹாசன் அவர்களை வேண்டுகோள் வைக்கிறேன்… என் தமிழருக்கு என்று ஒரு தனி குணம் உண்டு. என் தமிழ் சமூகத்தை கேவலமான, மோசமான, அநாகரிக பண்பாட்டு சீரழிவுக்கு அழைத்துச் செல்லாதீர்கள்.
தொடர்ந்து இந்த அசிங்கங்கள் அந்த பிக் பாஸில் தொடர்ந்து அரங்கேறும் என்று சொன்னால், ஒரு நாள் பிக் பாஸ் என்கின்ற அந்த கூடம் இருக்காது என்பதை நான் எச்சரிக்க விரும்புகின்றேன். எந்த பண்பாட்டை இளைய தலைமுறைக்கு விதைக்கிறீங்க… எந்த நாகரிகத்தை என் இளைய தலைமுறைக்கு சொல்லித் தர வரிங்க.. எவ்வளவு பெரிய அநியாயம், அக்கிரமம். கோடிக்கணக்கான மக்கள் பார்க்கின்ற….
குடும்பம் குடும்பமாக பார்க்கின்ற அந்த தொலைக்காட்சியில் எப்பவும் இரட்டை வசனங்கள்…. வேற நிகழ்ச்சி இல்லையா உங்களுக்கு….. தரமான நிகழ்ச்சி உங்களால் தயாரிக்க முடியவில்லை என்று சொன்னால் இழுத்து மூடிட்டு போங்கடா…. ரேட்டிங் என்கின்ற…. பார்வையாளர்களை கவர்வதற்கு…. பன்னாட்டு கார்ப்பரேட் பெரும் நிறுவனங்கள் விளம்பர சுரண்டலுக்கு…. என் மொழியும், என் இனத்தையும், என் பண்பாட்டையும் என் ஆண் – பெண் உறவு என்கின்ற அந்த தாம்பத்தியத்தையும் படுக்கை அறையில் காட்டுகின்ற மோசமான கலாச்சார சீரழிவு கொண்டு வந்து என் மக்கள் மீது திணிக்காதீர்கள்… சொல்ல முடியாது….
சேலத்துல இருக்கிற இளைஞர் ஆயிரக்கணக்கானவர்களிலே…. ஒரு 100 பேர தம்பி சுரேஷ் கூட்டிட்டு வா…… ஒரு 50 பேரு சிலம்பு கூட்டிட்டு வா….. ஒரு பத்து பேர முத்து கூடிட்டு வா….. பிரபு ஒரு 25 பேர கூட்டிட்டு வா உங்களுக்கு டார்கெட்டே….. ”பிக் பாஸ்” நான் கொடுக்கிறேன் டார்கெட்…. ஒரு மாத காலத்திற்குள் விஜய் டிவியும், கமலஹாசனும் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யவில்லை என்று சொன்னால், அங்கு அதற்கான ஸ்டூடியோ, அதற்கான படப்பிடிப்பு கூடம் இருக்காது என்பதை எச்சரிக்கை செய்வதற்கு நீங்கள் அணி திரட்டி கொண்டு வாருங்கள் என் தெரிவித்தார்.