திருப்பூர் செரங்காடு 3-வது குறுக்கு தெருவை சேர்ந்த கோபியின் மனைவி சத்யாவுக்குக்கு சென்ற 18-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கோபி தன் மனைவியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனிடையில் கடந்த 19ம் தேதி சத்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சத்யாவை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளனர். அப்போது அருகிலிருந்த பெண் ஒருவர் குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறி வாங்கியுள்ளார்.

அதன்பின் அவர் வெளியில் செல்வதாகவும் சத்யாவின் மாமியாரிடம் குழந்தையை கொடுத்துவிட்டதாக தெரிவித்தார். எனினும் சந்தேகமடைந்த சத்யா உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் இருந்த செவிலியர்கள் மற்றும் காவலாளிகளிடம் தன் குழந்தை கடத்தப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரபடுத்தப்பட்டு வந்த நிலையில், குழந்தையை கடத்திய பெண் பாண்டியம்மாளை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். அதோடு கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.