நாட்டில் இப்போது முக்கிய நகரங்களில் விரைவான போக்குவரத்துகளை மேற்கொள்ள எக்ஸ்பிரஸ் சாலைகள், வந்தே பாரத் ரயில்கள் உள்ளிட்ட போக்குவரத்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் புல்லட் ரயில் திட்டமும் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மும்பை-அகமதாபாத் இடையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதன்பின் அடுத்தக் கட்டமாக ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன்கீழ் வெற்றிட குழாய்க்குள் கேப்சூல் அனுப்பப்படும். அதனை தொடர்ந்து காந்த அலைகள் வாயிலாக மின்னல் வேகத்தில் இந்த கேப்சூல் நகர்த்தப்படும். இந்த வெற்றிட குழாய்களை நிலத்துக்கு கீழ் (அ) நிலத்திற்கு மேல் தூண்கள் அமைத்தும் இயக்கலாம். இத்தொழில்நுட்பத்தை செயல்படுத்த பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை-பெங்களூர் இடையில் Hyperloop தொழில்நுட்பம் நடைமுறைபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என இந்தியன் ரயில்வே ஆய்வு செய்து வருகிறது. இப்போது சென்னையில் இருந்து பெங்களூருக்கு போக 4 மணி 30 நிமிடங்கள் ஆகும் நிலையில், Hyperloop தொழில்நுட்பம் அறிமுகமானால் நீங்கள் 30 நிமிடத்திற்கும் குறைவாக அதாவது 25 நிமிடங்ககளில் பெங்களூரை சென்றடையலாம்.