UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 28 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக UGC NET தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் டிசம்பர் ஆறு முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் விண்ணப்பதாரர்கள் நேரடியாக https://ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.