முன்னனி நடிகைகளில் ஒருவரான சமந்தா நாயகியாக நடித்து வெளியாகிய “யசோதா” படம் வெற்றி பெற்றது. இதையடுத்து வரும் பிப்,.17ஆம் தேதி மீண்டும் அவர் கதாநாயகியாக நடித்திருக்கும் சாகுந்தலம் படம் திரைக்கு வருகிறது. புராண கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படத்தில் சமந்தாவுடன் தேவ் மோகன், பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, அதிதி பாலன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் சாகுந்தலம் படத்தில் உயர்ரக கற்கள் பதிக்கப்பட்ட 30 கிலோ எடை கொண்ட ஒரு புடவையை அணிந்து ஒரு வார காலம் சமந்தா நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை அணிந்தும் இந்த படத்தில் சமந்தா நடித்துள்ளார் என கூறப்படுகிறது.