வெளி நாட்டில் பொறியாளராக பணிபுரிந்த ரவீந்தர் சந்திர சேகர் லிப்ரா புரொடக்ஷன் எனும் நிறுவனம் ஒன்றை துவங்கி தயாரிப்பாளரானார். இவர் சுட்டகதை, நளனும் நந்தினியும், கொலைநோக்கு பார்வை, கல்யாணம், முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களை தயாரித்தார். இதற்கிடையில் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார் ரவீந்தர். இந்நிலையில் ரவீந்தர் வெளியிடும் காதல் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற திரைப்படம் அவருக்கு லாபத்தை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரவீந்தர் பேசியதாவது “இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அறிவு மற்றும் திறமை அதிகமாக உடையவர்கள் ஆவர். இப்படம் நிச்சயம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் தயாரித்ததில் இத்திரைப்படம் தான் எனக்கு ஒரு லாபகரமான படமாக அமைந்துள்ளது” என்று அவர் கூறினார். இதற்கிடையில் எல்லாம் மனைவி மகாலட்சுமி வந்த நேரம் என நண்பர்கள் வாழ்த்து கூறிவருகின்றனர்.