பகாசூரன் படத்தின் மேக்கிங் வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

திரெளபதி, ருத்ர தாண்டவம் திரைப்படங்களை டைரக்டு செய்த மோகன்.ஜி இப்போது பகாசூரன் எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும் ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளனர். சாம் சிஎஸ் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

சமூகத்தில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாக கொண்டு பகாசூரன் திரைப்படத்தின் கதையை அமைத்து உள்ளனர். படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில், இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் தீம் இசையுடன் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். பகாசூரன் படம் வரும் பிப்.17 ஆம் தேதி திரையரங்குகளில் ரீலிஸ் ஆகிறது.