புதுச்சேரி மாநிலத்தில் பிரபல ரவுடி விஜய் என்பவர் வசித்து வந்தார். ரவுடி விஜய் பல கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களை அரங்கேற்றி வந்த நிலையில் தற்போது கடலூர் காவல்துறையினரின் என்கவுண்டரில் உயிரிழந்தார். சமீபத்தில் லாரி ஓட்டுனரிடம் வழிப்பறி செய்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் தான் ரவுடி விஜய். இவரை தீவிரமாக தேடி வந்த காவல் துறையினர் கடலூரில் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.

அங்கு சென்று அவரை கைது செய்ய முயற்சித்த நிலையில் ரவுடி விஜய் காவல்துறையினரை அறிவாளால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் ரவுடி விஜயை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்து விட்டார்.  ரவுடி விஜய் மீது கிட்டத்தட்ட 33 கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் ரவுடி விஜய் என்கவுண்டரில் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.