
தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை சென்ற மாதம் தென்காசியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது திமுகவினர் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என அவர் கூறினார். அதிலும் குறிப்பாக திமுகவின் முக்கிய புள்ளிகளின் ஊழல் தொடர்பான விவரங்கள் ஆதாரங்களுடன் தமிழக மக்களிடையே வெளியிடப்படும் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை தி.மு.க முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிடப்போகிறாரா? (அ) ஊழல் பட்டியலை வெளியிடப் போகிறாரா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். இதற்கு முன்னதாக திமுகவினரின் ஊழலை அம்பலப்படுத்த போகிறேன் என தெரிவித்திருந்த அவர், தற்போது சொத்து பட்டியலை வெளியிடப்போகிறேன் என சொல்கிறாரே என திமுகவினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும் சொத்து பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் சம்பந்தப்பட்ட நபர்களே கொடுத்து இருப்பதால் இதில் புது தகவல் என்ன இருக்கப்போகிறது?, அப்படி புதிய சொத்துப் பட்டியல் (அ) ஊழல் பட்டியலை வெளியிட்டால் அதனை தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவாரா? என்ற அடுக்கடுக்கான கேள்வியை எழுப்பி இருக்கின்றனர்.