
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 18 வயதான இளம்பெண் வசித்து வருகிறார். இவர் புள்ளம்பாடி விடுதியில் தங்கி ஐடிஐயில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இவரை அதே பகுதியில் சேர்ந்து சிலம்பரசன்(30) என்பவர் காதலித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இந்நிலையில் அந்த மாணவி விடுமுறை நாட்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். அதேபோன்று கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வீட்டிற்கு வந்தபோது, சிலம்பரசன் அவரது நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து மயக்கம் அடையச் செய்துள்ளார்.
பின்னர் குடிபோதையில் இருந்த சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
அதோடு மாணவியை நிர்வாணமாகவும் வீடியோ எடுத்து வைத்துள்ளனர். அந்த வீடியோவை மாணவியிடம் காட்டி யாரிடமும் சொல்லக்கூடாது மீறினால் இணையதளத்தில் வெளியிடுவேன் என்று காதலன் மிரட்டியுள்ளார். இந்நிலையில் மாணவியின் உடலில் மாற்றம் தெரிந்ததால் கடந்த 31-ம் தேதி அவரது தாயார் விசாரித்த போது, நடந்த விஷயங்களை மாணவி கூறினார்.
இதைத்தொடர்ந்து 3 மாதம் கர்ப்பமாக இருந்ததால், சிலம்பரசன் கருக்கலைப்பு மாத்திரை வாங்கிக் கொடுத்து, கருவை கலைக்க வைத்துள்ளார். இது பற்றி தெரிந்த மாணவியின் உறவினர்கள் சிலம்பரசனை கண்டித்தபோது, அவர் உறவினரிடமும் வீடியோவை காட்டி மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது தாயரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும் தன் மகளுக்கு நடந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.