சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸை ஒருமையில் விளாசித் தள்ளினார்.

“பாமக என்பது சதியால் உருவானது அல்ல, ரத்தம் சிந்தி உருவான இயக்கம்; இதைச் சூழ்ச்சியால் அபகரிக்க நினைத்தால் அது நடக்காது” என்று அவர் எச்சரித்தார்.

தனது தந்தை ராமதாஸையே கண்ணீர் விடவைத்த அன்புமணியின் செயல் மன்னிக்க முடியாத மாபெரும் துரோகம் என்றும், பதவி சுகத்துக்காக அவருடன் சென்றவர்கள் இப்போது கலக்கத்தில் இருப்பதாகவும் ஜி.கே.மணி சுட்டிக்காட்டினார்.

“பாமக என்றால் ராமதாஸ், ராமதாஸ் என்றால் பாமக; உங்களால் ஒருபோதும் கட்சியைக் கைப்பற்ற முடியாது” என்று அன்புமணிக்கு ஜி.கே.மணி சவால் விடுத்தார். “உங்களுக்கு ஒரு மகன் துரோகம் செய்தால், உங்களுக்குப் பாதுகாப்பாக நாங்கள் ஒரு லட்சம் மகன்களாக நிற்போம்” என்று அவர் ராமதாஸை நோக்கி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

“தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அதுபோல பாமக-வுக்கு அடுத்த ஆண்டு நல்ல காலம் பிறக்கப்போகிறது; அன்புமணியின் அரசியல் கதை முடிந்துவிட்டது, அவர் வேறு வேலையைப் பார்க்கலாம்” என்று ஜி.கே.மணி பேசியது தொண்டர்களிடையே பலத்த கரவொலியை ஏற்படுத்தியது.