பெரும்பாலான இந்தியர்கள் இஸ்ரேல் நாட்டிலேயே தொடர்ந்து தங்கி இருந்து தங்களுடைய படிப்பு அல்லது பணிகளை கவனித்து வருகிறார்கள் என்பது தற்போது உள்ள நிலைமையாக இருக்கிறது.   கிட்டத்தட்ட 20,000 இந்திய குடிமக்கள் அந்த நாட்டிலே இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஹமாஸ் தீவிரவாத தாக்குதல் முடிந்து கிட்டத்தட்ட 2ஆவது  வாரம்  முடிய இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் இதுவரை 1200 இந்தியர்கள் மட்டுமே தாயகம் திரும்பி இருக்கிறார்கள். 5 சிறப்பு விமானங்கள் மூலமாக அவர்கள் தாயகம் திரும்பி இருக்கிறார்கள்.

இந்த விமானங்களிலேயே நேபாள நாட்டைச் சேர்ந்த 18 பேரும் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். பெரும்பாலான இந்தியர்கள் அங்கேயே தங்கி இருக்கும் சூழ்நிலையிலே  இந்தியாவை சேர்ந்த செவிலியர் ஒருவர் ராக்கெட் தாக்குதலிலே காயமடைந்திருந்தார். தனது கணவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சமயத்திலேயே ராக்கெட் தாக்குதல் நடக்கிறது என்கின்ற விவரத்தை தெரிவித்திருக்கிறார்.

அதற்காக அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. அடுத்து அவர் பற்றி தகவல் என்னவென்று இந்திய தூதரகம்  அறிய முயற்சித்த போது அவர் காயமடைந்திருப்பது தெரியவந்தது. அத்துடன்  மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் எனவும், அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தற்போது தகவல் கிடைத்திருக்கிறது.