
அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா என்ற மாகாணத்தில் டேகோனி என்ற நகர் உள்ளது. இந்நகரில் உள்ள வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 66 வயதான நபர் ஒருவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கியாஸ் நிலையத்துக்கு முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் வந்துள்ளனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த வயதானவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில், அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்பின் அந்த மர்ம நபர்கள் கியாஸ் நிலையத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.