சீனாவின் முக்கிய அரசாங்க அலுவலகங்களில் அமெரிக்க தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 1997 ஆம் ஆண்டு சீன அரசாங்கம் அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் சிப்புகளை சீனாவின் அரசாங்க அலுவலகத்திற்குள் தடை செய்தன.

இந்நிலையில் சீனாவில் முக்கிய அரசாங்கங்களில் அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர் சிப்புகள் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் குறிப்பாக சீனாவின் அணு ஆயுதம் சார்ந்த அலுவலகத்தில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே அமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப சாதனங்கள் சீனாவின் கருப்பு சந்தைகளில் விற்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.