கேரள மாநிலத்தில் நீதிமன்றத்தில் உள்ள 53 வருட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து 100-க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் விடுத்துள்ள கோரிக்கையில், நெரிசல் மிகுந்த நீதிமன்றங்களில் குறிப்பாக கோடை காலங்களில் இறுக்கமான ஆடையுடன் இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

எனவே தெலுங்கானா மாநிலத்தை போன்று கேரளாவிலும் நீதிபதிகள் சுடிதார் அணிய அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெண் நீதிபதிகளின் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.