திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன்,  இன்னைக்கு சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியாகவும்‌, முன்னேத்தியாராகவும், என் கீழடிக்கு கிடைத்திருக்க அந்த இடம் பாருங்கடா…. சமகாலத்துல இன்னைக்கு தமிழனுடைய வரலாறு, 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு என்று சொல்லுகின்ற, கீழடி அகழ்வு நடந்து கொண்டிருக்கின்ற இடம், உன் இஸ்லாமிய சகோதரனுக்கு சொந்தமான இடம் என்று இன்றைக்கு கூட வரலாறு பதிவு செய்கிறது.

அதுல கூட பாருங்க… அல்லாஹ், சரியா தான் செஞ்சிருக்கான் கடவுள். அந்த சிந்து சமவெளி நாகரீகத்துக்கு அடுத்தது, அந்த அகழ்வாராய்ச்சி கிடைக்கிற அந்த இடம் இருக்குது இல்லையா? இன்றைக்கு…  அந்த இடம் யாருக்கு? யாருடா இப்ப பிரசன்ட் அதுக்கு உரிமையாளரா, சொந்தக்காரங்களா யார் இருந்தாங்கனு, நான் நேரடியா போய் கீழடியில கேட்டபோது, ஒரு இஸ்லாமியர் தாங்கள் ஆய்வு கிடைக்க கிடைக்க எடுத்துக் கொள்ளுங்கள், எடுத்துக் கொள்ளுங்கள் என்று அனுமதித்தார்.

பட்டா, அவர் பெயரில்  இருக்கு. ஆக, பண்பாட்டுக்கு பட்டா என்கிட்ட இருக்கு, பீரங்கிக்கு பட்டா என்கிட்ட இருக்கு, அக்கினி ஏவுகணைக்கு அன்னைக்கு திப்பு சுல்தான் கிட்ட இருந்துச்சு. இன்னைக்கு எங்க அப்துல் கலாம் கிட்ட இருந்துச்சு. ஆக, எதிலில்‌ பார்த்தாலும் இந்த மண்ணில், இந்த தேசத்தை காப்பதிலும், இந்த தேசத்தின் பாதுகாப்பு அரணாகவும், அந்நிய ஏகாதிபத்தியத்தை புறமுதுகிட்டு, ஓட செய்வதிலும், காட்டி கொடுக்காமல் இருந்த, சாவுக்கர்களின் கூட்டம் அல்ல, இந்த கூட்டம். கொள்கைக்காக களத்திலே உயிரை தியாகம் செய்கிற, மான, மறவர் கூட்டத்தில் பிறந்தது  எமது இஸ்லாமிய சமூகம். என தெரிவித்தார்.