
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் தாக்குதல்கள் அதிகரித்து விட்டது. அதன்படி சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி இணையதளங்கள் ஆகியவற்றில் வெளியாகும் வேலை வாய்ப்பு விளம்பரங்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து வேலை வாய்ப்பு மோசடிகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் இதனை பயன்படுத்திக் கொண்ட மோசடி கும்பல் இளைஞர்களை குறி வைத்து இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே வேலைவாய்ப்பு விளம்பரங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு ஏதேனும் இருந்தால் சைபர் கிரைம் இணையதளமான https://cybercrime.gov.in அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.