பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் மக்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

காசா பகுதியில் இருந்து வடக்கில் 70 முதல் 80 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் முக்கியமான நகரம் தான் டெல் அவிவ்.  இந்த நகரம் தான் இஸ்ரேலில் இரண்டாவது பெரிய நகராக கூறப்படுகிறது. இங்கு இருந்து தான் இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்லும் பயணிகள் விமானம் மூலமாக ஏற்றி  விடப்படுகிறார்கள். இந்த பகுதிகளில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஏவுகணையை எச்சரிக்கும் அலாரம் தொடர்ந்து ஒழிப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ராக்கெட் வருவதற்கான சமிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டு வருவதாகவும்,  நகர் முழுவதும் சைரன்கள் ஒலிக்கிறது எனவும்  இஸ்ரேல் ராணுவம் விடுத்துள்ளது.ஹமாஸ் அமைப்பினர் டெல் அவிவ் மீது ராக்கெட் ஏவுகணைகளை வீசுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும்,  அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் தான் டெல் அவிவ் நகரம் தற்போது  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில்,  டெல் அவிவ்  நகரத்தில் தற்போது மிக அவசர நிலையான சைரன் ஒலிக்கப்பட்டு, பதற்றமான சூழ்நிலை உள்ளது.  காசா நகரத்தில் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய தரைப்படை பீரங்கிகள் தற்போது முற்றுகையிட்டு வருகின்றன.

தரை, கப்பல், விமான மூலம் முப்படை  தாக்குதல் நடத்தி வருகிறதாக கூறப்படுகிறது. வடக்கு காசா பகுதியில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வெளியேற முடியாமல்  தவித்து வருகின்றனர். காசா எல்லை பகுதியில் இருந்து எகிப்த் எல்லை பகுதிக்கு செல்வதற்காக நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து காத்திருப்பதாகவும், காசா நகர் முழுவதும் தண்ணீருக்கும்,  உணவுக்கும் கடும் தட்டுப்பாடு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.