சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்பவர் நகை திருட்டு  சந்தேக புகாரில் அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கில் 5 போலீசார் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, உயர்கல்வித்துறையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பேசி அவர் கூறியதாவது, திருப்புவனம் காவலாளி மீது புகார் கூறிய பேராசிரியர் நிகிதா மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.