
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட முன்னணி நடிகர் அஜித்குமார். நடிப்பு மற்றும் கார் ரேசிங்கில் அதிக ஆர்வம் உடையவர். சமீபத்தில் இவர் துபாய் 24 எச் கார் ரேஸில் பங்கேற்கள்ளதாக கூறினார். இந்த நிலையில் இதன் பயிற்சிக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக துபாயில் இருந்து பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் பயிற்சியின்போது ப்ரேக் ஃபெயிலியர் காரணமாக விபத்தை சந்தித்த அஜித் இன்று கார் ரேஸில் 3வது இடம் பிடித்துள்ளார்.
துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஜிடி4 பிரிவில் ஸ்பிரிட் ஆப் தி ரேசர் என்ற பட்டத்தையும் பெற்றார். வெற்றி பெற்ற பந்தய இடத்தை விட்டு வெளியே வந்த அஜித்திற்கு அவரது மனைவி ஷாலினி முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய தேசிய கொடியை கையில் ஏந்திய படி பரிசு மேடைக்கும் வந்து பரிசை பெற்றார். இந்திய நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இது குறித்து பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர். இந்த போட்டிக்காக நடிகர் அஜித்குமார் கிட்டத்தட்ட 25 கிலோ வரை தனது உடல் எடையை குறைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.